என்னவன்



------------
‍‍‍‍‍‍‍‍‍என்னவனே என் மனதை
கொள்ளை கொண்டவனே
மன்னவனே என்னுயிரை
மீட்டுத்தந்தவனே
உன் புகழை பாடுதற்கு
உரியவள் என்றும் நான்தானே
தேனமுதில் பிழிந்தெடுத்த
தெள்ளமுதும் நீதானே
பாலமுதில் கடைந்திட்ட‌
வெண்நெய்யும் நீதானே
சிங்கமென நீ நடந்து
சிரித்துவரும் வேளையிலே
தங்கமென தாவணிகள்
தானாகவே வந்தாலும்
தடுக்கிவிழா பார்வை
தனை தரணியங்கும்
படைத்திட்டாய்
கன்னியரின் பார்வையிலோ
காளையர்கள் அழிந்திடுவ‌ர்
என் க‌ண்ண‌னுன் பார்வையிலோ
கன்னிய‌ர்க‌ள் வழிந்திடுவ‌ர்
வான‌த்தில் இருப்ப‌தோ
ப‌ல‌ந‌ட்ச‌த்திர‌ம் என்
ம‌ன‌வான‌த்திலோ
நீ யொரு துருவ‌ ந‌ட்ச‌த்திர‌ம்
குடிப்ப‌ழ‌க்க‌ம் இல்லா நீ
ந‌ல்ல‌குடிப்ப‌ழ‌க்க‌ம்
உள்ள‌வ‌ன் மான‌த்திற்கு
மானைச் சொல்வ‌ர்
உன் த‌ன்மான‌த்திற்கு
ய‌த‌னைச் சொல்வேன்
க‌ண்ட‌வ‌ள் பின் செல்லாது
எனைக்க‌ண்ட‌ பின்
காத‌ல் கொண்டாயே
மாற்றாளுக்கு ம‌னைவியெனும்
மாங்க‌ல்ய‌த்தை
பூட்டி விட்டால் மான‌த்தோடு
மாண்டிடுவேன் மாம‌னுன் காத‌லியாய்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு