என் விருப்பமும் திருப்பமும்

விருப்பம் இது கொஞ்சம் விசித்திரமானது !
பூத்துக்குலுங்கும் ரோஜா மலரில்
தேன் உண்ண வண்டுக்குவிருப்பம்!
பூவையர் கூந்தலில் இருந்து
சிரிக்க அந்த ரோஜாவுக்கு விருப்பம்!
என் எண்ணங்களில் தோன்றிய
விருப்பங்களை எடுத்துக்கூற
எனக்கும் கொஞ்சம் விருப்பம் !
அதிக‌ம் ப‌டித்து ப‌ட்ட‌ம் பெற‌ விருப்ப‌ம் !
ஆனால் ஏழ்மையால் ஏற்ப‌ட்டதோ திருப்ப‌ம் !
ப‌டித்த‌ ப‌டிப்பிற்கேற்ற‌ ப‌த‌வி பெற விருப்ப‌ம் !
ஆனால் ல‌ஞ்ச‌ம் என்றசொல்லால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வேலை யில்லாத்திண்டாட்ட‌த்தை
ஒளித்திட‌வும் விருப்ப‌ம் !
ஆனால் வேலை தேடுவ‌தே
வேலையானால் ஏற்படுமோ திருப்ப‌ம் !
நான் காத‌லித்த‌ அவ‌ளை கை
பிடிக்க‌ விருப்ப‌ம் !
ஆனால் ஜாதி என்ற‌ சாக்க‌டையால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
வ‌ர‌த‌ட்ஷ‌னை இல்லா திரும‌ண‌த்தில்

தான் விருப்ப‌ம் !
ஆனால் த‌ட்ஷ‌னை வேண்டாமென்றதால்
ஏற்ப‌ட்ட‌தோ திருப்ப‌ம் !
போதையால் பாதை மாறிப்போவோரை
திசைதிருப்பவும் விருப்பம்!
ஆனால் போதையே அவனுக்குப்
பாதையானால் ஏற்படுமோ!
திருப்ப‌ம் ஊழ‌ல‌ற்ற‌ ஆட்சியில்
தான் என‌க்க்கு விருப்ப‌ம் !
ஆனால் ஊழலே ஆட்சீயானால்
நாட்டில் ஏற்படூமோ நல்ல திருப்பம் !
என் விருப்பங்க‌ள் யாவும் நிரைவேறினால்
நல்ல‌ திருப்ப‌ங்க‌ளும் உருவாகுமே. . . . . . ! 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு