காதல் + நீ = காதலி

முந்தானை முடிப்பினிலே
முடிந்து வைத்த முக்கனி போல்
சந்தனத்தில் சவ்வாதை
சமமாக சேர்த்ததுபோல்
செவ்வாழைக் கனியினிலே
செய்துவைத்த செந்தூரம் போல்
சங்கீத சன்னதியில்
சந்தங்களை கோர்த்தது போல்
சிந்துகின்ற வான்மழையும்
தங்குகின்ற தாமரையே!
ஏங்குகின்ற என்மனதில்
தூங்குகின்ற தூரிகையே!
பார்த்து நிற்க்கும் என் விழியை
காக்கவைக்கும் காரிகையே!
என்காதல் தனை
சொன்ன பின்னும் உன் காதல்
கண்பாரா காதலியே !
உன்முகத்தில் தெரியுதடி
ஓராயிரம் ஒளிநிலவு
காதலெனும் கனிரசத்தை
என்மீது கொட்டுவாயோ !
துளியளவு!
என் காதலியாய் நீ ஆகிவிட்டால்

என்மனைவியாய் நான் ஆக்கிடுவேன் !!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு