ச‌ண்டாளி!









கருவிழிகளின் மின்னல் கீற்றுகளாய்
கண்டவளின் கண்கவர் கண்களில்
வண்ணத்துப் பூச்சிகளும் வட்டமிட
வண்டுகளும் மலெரென்று மொய்த்துவிட
நான்மட்டும் விழாதிருப்பெனோ !
நானும் விழுந்துவிட்டேன்
விண்ணவள் கண்ணுக்குள் !
நிலவவள் நெஞ்சுக்குள் !
பார்த்தோம் ப‌ழ‌கினோம்பாச‌ம்
ப‌கிர்ந்தோம்தாகம் தணிக்கவே
தனிமை நாடினோம் காத‌ல்
தாக‌த்தால் க‌ட்டிய‌ணைத்து
முத்த‌மிட‌காட்டிய‌ அவ‌சரத்தில்
காத‌லிய‌வ‌ள் சொன்னாள்
க‌ல்ய‌ண‌ம் ஆக‌ட்டும் மென்று
காத்திருந்தேன் ம‌ணிக‌ண‌க்கில்
பாத்திருந்தேன் நாள்க‌ண‌க்கில்
பெண்பார்க்கும் ப‌ட‌த்தில்
பித்தலாட்டம் செய்துவிட்டாள்
க‌ண்ட‌ அவ‌னை க‌ண‌வ‌னென்றாள்
காத‌ல‌ன் எனை க‌ள்வ‌னென்றாள்
வ‌ண்டாய்சுற்றிய எனக்கு வ‌ண்டாள்
தந்த பட்டம் பைத்தியமென்று
ஏனென்ற‌ போது நீ என் சாதி யில்லை
ம‌த‌மும் இல்லை என‌வே
ந‌ம் திரும‌ண‌த்தில் ச‌ம்ம‌த‌மும்
என‌க்கில்லை என்றாள் ச‌ண்டாளி! 




என்றும் நீ என்னோடுதான் 
சொந்தங்களே சுமையானது
சோகங்களே சுகமானது
பந்தங்களே பகையானது
பாசங்களும் பகல் வேசமானது
நெருங்கிய உறவுகளும்
நெருங்காது போனது
விரும்பிய உறவுகளும்
விரும்பாது போனது
கனிந்த காதல் கூட
கசந்து போனது
நோய்களும் நொடிகளும்
நோகாமல் உள்ளன
பசியும் பட்டினியும்
பகையில்லாது போனது
சமுதாயம் என்பார்வையில்
சங்கடமானது
ஏமாற்றும் ஏமாற்றமும்
ஏகமாய் உள்ளது
குண்டுகளும் தோட்டாவும்
குறிபார்த்தே இருக்கின்றன
கொலையும் கொள்ளையும்
கொள்கையாகிவிட்டன
உலகம் உள்ளங்கைக்குள்
சுருங்கியது போல்
மனித மனமும்
சுருங்கிப்போய்விட்டது
நிழல் தேடும் மரங்களே
நிஜமாகி போனது
இத்தோடு முடிந்ததா?
என்றால் பத்தோடு
பதினொன்றாய் வருமையும்
சொன்னது "என்றும் நீ என்னோடுதானென்று" 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு