அன்புள்ள அப்பாவுக்கு



தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தந்தை போலொரு மனிதர் தரணியிலில்லை
ஐம்ப‌துஆண்டுக‌ள் அன்போடு வாழ்ந்தாலும்
ஐய‌மில்லை ய‌ய்யா உம் பாசம் பெரிய‌தையா
க‌ண்போல‌ வ‌ள‌ர்த்த‌ நீங்க‌ள் கண்,
க‌ல‌ங்க‌ விட்டுக ‌ண‌வ‌ன் பிரிவால்
க‌ல‌ங்கும் என் தாயின்க‌ண்ணீரை க‌ண்டீரோ?
காணாது சென்றீரோ?
அந்த‌ நாள் நினைவுகளும் எங்களோடு
வாழ்ந்த ‌அந்த‌நாள் ஞாப‌க‌ங்கங்களும் !
நிழலாடு கின்றதையா !
அன்பை பொழிந்துவிட்டு
அன்னையாய்யாக்கிட்டு
அன்பை சுமந்து
அல்லல் படும்படியாய்
ஆக்கிட்டுச்சென்றீரோ!!
அவ‌ச‌ர‌மாய் சென்றீரோ!
ஐந்தாறு மாதங்களில்
அவிந்து விடும் அவர்
நினவு பதினாறுக்கு வந்தாரும்
சொன்னார்கள்வாயார‌ அழுதார்க‌ள் !
ஆண்டுக‌ள் ப‌ல‌ ஆயினும்
உம் நினைவுக‌ள் அழிய‌வில்லை
எம் நெஞ்ச‌மும் மற‌‌க்க‌வில்லை!
த‌வ‌ருக‌ள் செய்த‌ போது
எனை த‌ண்டித்தீர்க‌ள்
த‌ரங்கெட்ட‌ வார்த்தையில்
திட்டிய‌போது எனை
ம‌ன்னித்தீர்க‌ள் அன்று வாங்கிய
அடிகளால் உடல் நொந்தது
இன்று வாங்கிய அடியால்
உள்ளம் நொருங்கியது!
தந்தை சொல் கேட்ட தணையன்
தரங்கெட்டு போனதில்லை,
த‌ந்தை வ‌ழி ந‌ட‌ந்தோன்
ம‌ன‌ங்கெட்டு போன‌தில்லை !
நீர் இல்லாத‌ வாழ்க்கை
நீரில்லா மீன் போலானது!
நீரில்லா நீறோடையில்
நீந்துவதற்கு "நீர்" இல்லையே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு