சுனாமி"

கடற்கரையில் கட்டிய மணல் வீடுகள்
கடல் அலைகளால் அழிவதைக்
கண்டிருக்கிறேன்
பேரலை வந்து வீடுகளியும்
அழித்தபேரளிவை அன்றுதான்
கண்டேன் ! பெளர்ணமியன்று
கடல் கொஞ்சம்கொந்தளிக்கு
மெனச்சொன்னார்கள்
மூர்கத்தனமான கொந்தளிப்பால்
மூர்ச்சையானது எத்தனை
உயிர்கள்யாரையோ தேடித்தேடி
அவர் வராததால்கரைவந்து
திரும்புகிறாய் எனகண்ணியமாய்
நினைத்தேன் ஆனால்நீதேடிய
உயிர்களும் உடல்களும்
உடமைகளும்தான் எத்தனை
எத்தனை !உன் அலைகளை
எம்மக்கள்பார்த்துரசிப்பதால்
தான் அடிக்கடிவந்து போகிறாய்
என வாஞ்ஞையோடு இருந்த
என்னை வஞ்சித்து விட்டாயே
கடல் அலைபோலத்தான்
மனிதவாழ்கையும் இன்பமும்
துன்பமும் வந்துவந்துபோகு
மென பெரியோர்கள் சொல்ல
கேள்விஅதனால் தானோ
என்னவோஅமைதியாய்
வாழ்ந்த எம் மானிடஉயிர்களை
சுனாமி என்ற பினாமியால்
வந்து வந்து போக வைத்தாயே
மக்கள்கூட்டம் அதிகமானால்
அலைகடெலென கூட்டம்
என்போம்அதனால் தான்
அலையால் கூட்டம்கூட்டமாய்
கொன்றுகுவித்தாயோ!
என் சமுதாயத்தில் ஒரு
உயிர்போனாலும் ஓரயிரம்
சடங்குகளும் சம்பிரதாயங்களும்,
சட்டதிட்டங்களும் ஆனால் அன்று
உன் கோரப்பசியால்
உயிரை உணவாக்கி
உடலைகழிவாக்கியனாயே!
உன்னால் உயிர்போன உடல்களை
ஒரேகுழியில் ஒரேசடங்காய்
போட்டுபுதைத்தகாட்சிக் கொடுமையை
என்னவென்றுசொல்வேன்
எப்படித்தான் மரப்பேன்
சாவதர்காகத்தான் பிறந்தோ
மென்றாலும்எதையாவது
சாதிக்கத்துடிக்கும்என் சமூகத்தை
உனக்கேற்ப்பட்டதாகத்தால்
தண்ணீரால் உயிர் குடித்தாயே!
சித்தர்கள் வாழ்ந்திட்ட சிங்கார
பூமியிலே புத்தனும் வாழ்ந்திட்ட
புண்ணிய பூமியிலே எத்தர்கள்
ஏகம்பேர் இருக்க பாவம்
ஏழைகளை பார்த்து ஏவல்தனை
புரிந்தாயோ! உன் கோரப்பசி
எனும் கொடும் பார்வை என் மீது
படாததால் உயிர்தப்பினேன்!
என் ஒருவன் உயிர் தந்திருந்தால்
நீ பலி எடுத்த உயிர்களை
விட்டிருப்பேன்எனச் சொல்லி
இருந்தால் ஓடோடிவந்து
உன் காலடியில் மாண்டிருப்பேன்!
குடந்தையில் கருகிய குஞ்சுகளால்
ரணம் இன்னும் ஆரவில்லை
அதர்குள்வெந்த புண்ணில் வேல்
பாச்சினாயே!தாண்டவம்
கேள்விப்பட்டிருக்கிறேன்
ஆனால் அன்று நீ ஆடிய
"கோரத்தாண்டவம்"இதுவரை
பார்த்ததில்லை இனியும்
பார்க்க விருப்பமில்லை
ஆர்ப்பரிக்கும் அலை களால்
ஆள்பரிக்கும் அவலமினி
வேண்டாம் இனியும் தலை
தூக்கவேண்டாமென தயவாய்
வேண்டுகிறேன்!
(சுனாமியின் போது எழுதிய கவிதை) 


வேதனை
குடந்தையில் கருகிய குஞ்சுகளை
கண்டபோது வேதனைசுனாமி
என்றகொலைகாறலையின்
பினாமியைகண்டபோதும் வேதனை
அஞ்சுபூதத்தின் அட்டகாசத்தை
விட ஆரறிவு பூதத்தின் அடாவடியால்
வேதனையோ வேதனை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

என் விருப்பமும் திருப்பமும்

பாரதியின் கனவு‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

காலம் மாறிப்போச்சு